ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ள வெளிநாடுகளுக்கு அநுரகுமார திஸாநாயக்கவும் பயணம் செய்வதாக அமைச்சா் மஹிந்த அமரவீர தொிவித்துள்ளாா்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
“ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையானவற்றறை பெற்றுக்கொள்ள வெளிநாடுகளுக்கு பயணம் செய்கின்றார் என நினைக்கின்றேன்.
எது எவ்வாறாக இருந்தாலும் தேர்தல் நடைபெறுவது இங்குதான். எனவே வெளிநாடுகளுக்கு செல்வதனால் அங்குள்ள மக்கள் வாக்களிக்க இங்கு வரப்போவதில்லை.
அரசியல் பற்றி கதைப்பார்கள்தான். ஆனால். பிரித்தானிய, அமெரிக்கா அவுஸ்திரேலியாவிலிருந்து யாரும் வரப்போவதில்லை.
அவர்கள் அரசாங்கத்தை திட்டிக்கொண்டு இருப்பார்கள் ஆனால், அங்குள்ள மக்கள் வாக்களிக்க வரப்போவதும் இல்லை. அதற்கான அதிகாரங்களும் அவர்களுக்கு இல்லை.
அத்துடன் நாட்டிலுள்ள பலமிக்க பணம்படைத்த கட்சி மக்கள் விடுதலை முன்னிணி அல்லவா?
நாட்டிலுள்ள அரசியில் கட்சிகளில் அதிகம் பணம் கொண்ட கட்சி மக்கள் விடுதலை முன்னிணி மட்டுமே.
ஆட்சி நடத்தினாலும் கூட, மக்கள் விடுதலை முன்னிணியிடமுள்ள 100 இல் 1 ஆவது ஏனைய கட்சிகளிடம் பணம் இல்லை. பில்லியன் கணக்கில் பணம் வைத்துள்ள கட்சி அதுவாகும்” என அமைச்சா் மஹிந்த அமரவீர மேலும் தொிவித்தாா்.