பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அநுராதபுரத்தின் புனித பூமியை வழிபட வரும் பக்தர்களுக்காக இன்று முதல் விசேட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அநுராதபுரம் புனித பூமிக்கு வரும் பக்தர்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் பேருந்து மற்றும் புகையிர சேவைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக அநுராதபுரத்திற்கு வருகை தரும் மக்களுக்காக மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.
இதேவேளை பொசன் தினத்தினை முன்னிட்டு 20,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.