யாழ்ப்பாணத்தில் பெருமளவான கசிப்பு மற்றும் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த நபர் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்கள், இரண்டு இலட்சம் மில்லிலீட்டர் கோடா மற்றும் ஆறாயிரம் மில்லிலீட்டர் கசிப்பு என்பனவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.