கள்ளக் குறிச்சியில் 38 பேர் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்துள்ள நிலையில் அவர்களது மரணத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியிறுத்தியுள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தொடர்ந்து 45 ஆண்டுகளாக மதுவுக்கு எதிராக போராடி வருகிறேன்.
கடந்த ஆண்டு மே மாதம் மரக்காணம், மதுராந்தகத்தில் 30 பேர் உயிரிழந்தனர். அப்போது அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எனினும் அது நடக்கவில்லை.
தற்போது கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் பருகி 5 பெண்கள் உட்பட 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
கள்ளச் சாரயம், கஞ்சா விற்பனையில் தமிழ்நாடு தள்ளாடுகின்றது. எனவே தி.மு.கவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.