ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் பிரிவான “ஈரானிய புரட்சி இராணுவத்தை” பயங்கரவாத குழுவாக அறிவிக்க கனடா தீர்மானித்துள்ளது.
கனேடிய எதிர்க்கட்சி கொடுத்துவரும் அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக கனேடிய பிரஜைகள் மற்றும் இராஜதந்திரிகளை ஈரானில் இருந்து கனடாவுக்கு மீள அழைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஈரானிய புரட்சிகர இராணுவம் ஈரானின் இராணுவ, அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் பெரிதும் தலையிடுவதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.