கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 114 பேர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி என பல்வேறு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் சிறப்பு மருத்துவக்குழுவினர் மற்றும் தாதியர்கள் குழு 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுவரை 29 பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கிற்குத் தேவையான உதவிகளை அரசு மேற்கொண்டு வருவதுடன், முதற்கட்டமாக 29 பேருக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.