உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய பொலிஸ் துறையை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் தற்போது ஜே.வி.பியுடன் இணைந்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் என்.பி.பி (NPP) என்ற ஒரு அமைப்பு இல்லை. அது ஜேவிபியிதை;ரதான் குறிப்பிடுகின்றது.
என்.பி.பி என்பது பொய்யான கூட்டணி. பொலிஸ் அதிகாரிகள் தீவிரவாதிகளுக்கு துணை போவது இலங்கை பொலிஸ்துறைக்கு ஏற்பட்டுள்ள அவமானமாகும்.
155 வருடங்கள் பழையாமையான பெருமையை கொண்ட துறையே இலங்கை பொலிஸ்துறை உலகில் ஸ்கொட்லாந்து நாட்டு பொலிஸ்துறையை விட மிகவும் எமது பொலிஸ் துறையே, சக்திவாய்ந்தது.
நான், முன்னாள் இராணுவ தலைமை அதிகாரி என்ற வகையில், சில விடயங்களை குறிப்பிட விரும்புகிறேன்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக, வெவ்றோரு நாடுகள் இலங்கை பொலிஸாருக்கு முன்தாகவே தகவல் வழங்கியுள்ளது.
இரகசிய பொலிஸ் துறையான சிஐடிக்கும், இவ்வாறு தகவல் வழங்கப்பட்டது. இந்த விடயம், இரகசிய பொலிஸ் துறையில் பணியாற்றும் பொலிஸ் அத்தியகட்சகரும் அவருடன் பணியாற்றும் இரண்டு அதிகாரிகளும் வெளிக்கொணர்ந்தனர்.
இது இவ்வாறு இருக்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாக மாவனெல்ல பிரதேசத்தில் புத்தர் சிலை ஒன்று உடைக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை நடத்தியதும் ஜேவிபியுடன் இணந்துள்ள இந்த அதிகாரிகளே. நாடாளுன்ற உறுப்பினர், கபீர் ஹாசீமின் செயலாளர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது.
இது குறித்தான விசாரணைகளையும் நடத்தியவர்களும் இவர்கள் தான். வண்ணாத்திவில்லுப் பிரதேசத்திலும் பாரியளவிலான ஆயுதங்கள் மீட்டப்பட்டன.
அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டவர்களும் இந்த அதிகாரிளே.
இத்தனை குற்றச் சம்பவங்கள் நடந்தும் குறித்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அசமந்தப் போக்கில் இருந்தமையினாலேயே ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆகவே இந்த விவகாரம் குறித்து, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும்.
எனினும் இதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகவே குறித்த அதிகாரிகள் இருவரும் தற்போது ஜே.வி.பியுடன் இணைந்துள்ளார்கள்” என மஹேஷ் சேனாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.