உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் மட்டக்களப்பில் உள்ள பல பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு பல விடயங்களை ஆராய்ந்து வருகின்றார்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலில் முற்றாக சேதமாக்கப்பட்ட சீயோன் தேவாலயத்தை பார்வையிட்டுள்ளார்.
தேவாலையத்தின் புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.
ஜனாதிபதி செயலகத்தின் நிதியுதவியுடன்இ புனரமைப்புப் பணிகளைப் பூர்த்தி செய்ய இலங்கை இராணுவத்தின் உடனடி உதவியை பெற்றுக்கொள்ளுமாறு இராணுவத் தளபதிக்கு ஜனாதிபதி பணிபுரை விடுத்துள்ளார்.
இதேவேளை மட்டக்களப்பிற்கு இரண்டு நாட்டகள் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகை தொடர்பாக செய்தி சேகரிப்புக்காக சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியிடம் ஊடகவியலாளர்கள் பல வினாக்களை எழுப்புவதற்காக காத்திருந்த நிலையில் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினால் அவ்விடத்தில் இருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர்.