சவுதி அரேபியாவில் மெக்கா புனித யாத்திரை சென்றபோது கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,301 ஆக உயர்ந்துள்ளது.
அங்கு சில பகுதியில் 50 டிகிரி செல்சியஸை தாண்டியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் எகிப்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 16 லட்சம் யாத்ரீகர்கள் ஹஜ்ஜுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.