ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றினை ஆற்றவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இதன்போது மக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.