குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு பரவுவது அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்
இதன் காரணமாக சுகாதாரமற்ற இடங்களில் உணவு உண்பதை தவிர்க்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்ட சிறுவர்கள் அதிகம் காணப்படுவதாகவும் இன்புளுவன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல சிறுவர்கள் சிகிச்சை பெற்று வெளியேறியதாகவும் அவர் தெரிவித்தார்
இதேவேளை, இந்த நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.