அமெரிக்காவில் நிவாடா மாகாணம் லாஸ் வேகஸ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது..
இதில் 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 வயதான சிறுமி படுகாயமடைந்துள்ளனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றும் படுகாயமடைந்த சிறுமியை மீட்ட பொலிசார் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொலிசார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.