அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளை உள்ளடக்கிய நேட்டோ அமைப்பு, மிகப்பெரிய பாதுகாப்பான அமைப்பாக கருதப்படுகிறது.
இந்த 32 நாடுகளும் தங்களுக்குள் ஆயுதங்களை பரிமாறிக் கொள்ள முடியும். இந்த 32 நாடுகளில் ஒரு நாடு மீது இந்த அமைப்பில் இல்லாத நாடு தாக்குதல் நடத்தினால் அது ஒட்டுமொத்தமாக நேட்டோ நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படும்.
இந்த பாதுகாப்பான நோட்டோ அமைப்பின் பொதுச் செயலாளராக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது பிரதமர் பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கின்றமை முக்கிய விடயமாகும்.
அத்தோடு, உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிக்கலான நேரத்தில் மார்க் ரூட்டே பொதுச் செயலாளர் பதவியை ஏற்கவுள்ளார்.
ஜூலை 9 மற்றும் 11ஆம் திகதி வாஷிங்டனில் நடைபெறும் மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் புட்டின் மற்றும் மற்ற நாட்டின் அதிபர்கள் அதிகாரபூர்வமாக அவரை வரவேற்கவுள்ளனர்.
தற்போது பொதுச் செயலாளராக இருக்கும் நோர்வேயின் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் பதவிக்காலம் ஆகஸ்ட் 31ஆம் திகதி நிறைவடைந்ததும், ஒக்டோபர் முதலாம் திகதி மார்க் ரூட்டே பொதுச் செயலாளராக பதவி ஏற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் 10 வருடத்திற்கு மேல் இந்த பதவியில் நீடித்தார். உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ல் படையெடுத்தபோது அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.