இரவு நேர அஞ்சல் ரயில் தடம் புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த மலையகத்துக்கான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் ரயில் தடம் புரண்டமையினால் இன்று (30) அதிகாலை முதல் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.















