• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சம்பந்தனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவிப்பு! (UPDATE)

சம்பந்தனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவிப்பு! (UPDATE)

Ilango Bharathy by Ilango Bharathy
2024/07/01
in இலங்கை, பிரதான செய்திகள்
69 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனது 91ஆவது வயதில் நேற்றிரவு காலமானார்.

இந்நிலையில் அன்னாருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு தேசியத் தலைவராக, நம் நாட்டில் ஏற்பட்ட பிளவுகளைக் குறைக்க  அவர் அயராது பாடுபட்டார். அவரது இழப்புக்கு  நாடு முழுவதும் இரங்கல் தெரிவிக்கும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கைக்கு சேவையாற்றிய திரு .சம்பந்தன் அவர்களின் மறைவிற்கு இன்று ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம்.

அனைத்து இலங்கையர்களுக்கும் சம உரிமைகளை வழங்குவதற்கான அவரது அர்ப்பணிப்பு, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகும்.

அவருடைய நேர்மையான மற்றும் நியாயமான தலைமை எனக்கும் மற்றவர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். உண்மையில், இது ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கின்றது என எதிா்க்கட்சித் தலைவா் மேலும் குறிப்பிட்டாா்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர் ஆர்.சம்பந்தனின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்னாருக்கும் எனக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்புக்கள் இனிய நினைவுகளாகும்.  இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் கண்ணியம் போன்றவற்றை பெற்றுக்கொடுக்க அவர் பாடுபட்டார்.

அன்னாரின் மறைவு இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள அவரது நண்பர்களுக்கு, அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் பாரிய இழப்பாகும் என பிரதமா் நரேந்திர மோடி தொிவித்துள்ளாா்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரங்கல் 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் எனது  நீண்டகால அரசியல் நண்பர்.  நாங்கள் இருவரும் பல்வேறு விடயங்கள் தொடர்பில்  கலந்துரையாடியுள்ளோம்.

அவரது மறைவு இலங்கை அரசியலின் சகோதரத்துவத்திற்கு பெரும் இழப்பாகும். அன்னாரின் இழப்பில் இருந்து  அவரது  குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மீண்டு வருவதற்கு எனது ஆறுதல்களைத் தெரிவிக்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளாா்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைகின்றேன். அவர் தனது கொள்கைகளில் அசைக்கமுடியாத உறுதி கொண்டவர்.

இந்த இக்கட்டான இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினா் நாமல் ராஜபக்ச இரங்கல் வெளியிட்டுள்ளாா்.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் இழப்பு தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்கு பேரிழப்பாகும்.

தனது சட்டத் தொழிலை தியாகம் செய்து  மக்களுக்காக தன்னை அரசியலில் ஈடுபடுத்திய பெருமகான் அவர்.

மேலும் தமிழர்களின் மூன்று வகையான போராட்ட காலங்களிலும் தனது அரசியல் சாணக்கியத்தையும், அனுபவத்தையும் பல சந்தர்ப்பங்களில் இராஜதந்திரங்களாக அவர் பயன்படுத்தியிருந்ததை இத்தருணத்தில் நினைவில் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதன் மேலும் தொிவித்தாா்.

தமிழ் பேசும் மக்களின் தலைமகனின் இழப்பு பேரிழப்பாகும் : ஹரீஸ் எம்.பி இரங்கல்.

இலங்கை அரசியலில் இருந்த மூத்த சிறுபான்மை தலைவர் இரா. சம்பந்தன் ஐயா அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன். தமிழ் மக்களின் ஆணிவேராக நோக்கப்படும் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் சட்டத்தரணி இரா. சம்பந்தன் அவர்கள் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானதாக அறிந்து மிகவும் கவலை அடைந்தேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவரது அனுதாப செய்தியில்., சிறுபான்மை மக்களின் உரிமை சார்ந்த பிரச்சினைகளின் போதும் அவருடன் நேருக்கு நேராகவும், தோளோடு தோளாகவும் நின்ற நாட்கள் ஏராளம். தன்னை சார்ந்த இனத்தின் உரிமைகளுக்காக விட்டுக்கொடுப்புக்களோ அல்லது தளர்வுகளோ இல்லாது போராடிய தலைமையை இன்று தமிழ் மக்கள் இழந்திருக்கிறார்கள் என்பதை விட அனுபவமும், ஆற்றலும் கொண்ட சிரேஷ்ட அரசியல் ஆளுமையை இலங்கை தேசம் இழந்திருக்கிறது என்பதே உண்மை.

தம்பி ஹரிஸ், சிறுபான்மை சமூகமான நாங்கள் பிரிந்துவிடக்கூடாது என பாராளுமன்றத்தில் அடிக்கடி என்னிடம் கூறிவந்த அவர் சிறுபான்மை சமூகம் ஒன்றிணைந்து தான் அதிகாரப்பகிர்வு, முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அதிகாரம், உரிமைகளை பரஸ்பரமாக விட்டுக்கொடுப்புடன் வெல்ல வேண்டும் என்ற கருத்தை அடிக்கடி கூறிவந்தார். முஸ்லிங்களின் அபிலாசைகளையும், சிங்கள மக்களின் உணர்வுகளையும் மதித்த ஒரு தமிழ் தலைமை சம்பந்தன் ஐயா அவர்கள். இவரின் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற சிரேஷ்ட அரசியல் தலைமையான அவரின் காலத்திலையே இனப்பிரச்சினைக்கு தீர்வு வருமென்று நாங்கள் நம்பியிருந்தோம். இவரின் இழப்பினால் தீர்வு சம்பந்தமான இலக்கினை எவ்வாறு அடையமுடியும் என்ற கேள்வி எழுகிறது. இருந்தாலும் தான் சார்ந்த தமிழ் சமூகத்திற்கு அவர் செய்த சேவைகள், பங்களிப்புக்கள் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அவரது இழப்பினால் துயருற்ற அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள், நண்பர்கள், இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் எல்லோருக்கும் எனது அனுதாபங்களையும், ஆறுதல்களையும்  தெரிவித்து கொள்கிறேன் என தனது அறிக்கையில் அவா் மேலும் தெரிவித்துள்ளார்.

கொள்கை வேறு- கோட்டை வேறு- ஆனாலும் எமது அஞ்சலிகள்- சம்பந்தனின் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ்! 

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் வயதில் எமக்கு மூத்தவர், கொள்கை வேறு, கோட்டை வேறாக இருப்பினும் அரசியல் தளத்தில் எம்முடனும் சம காலத்தில் பயணித்தவர்.

முரண்பாடுகள் இருப்பினும் காணும் பொழுதுகளில் அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதுண்டு.

வயது மூப்பின் காரணமாக அவர் மரணித்து விட்ட செய்தி துயரைத் தந்துள்ளது. அவரது இழப்பில் துயருறும்  சகலருக்கும் ஆறுதல் கூறுகின்றேன். அவருக்கு அஞ்சலி மரியாதை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்  கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

சம்பந்தனின் மறைவுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அனுதாபம் தெரிவிப்பு!

இலங்கைத் தமிழர்களின் பெருந் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமடைவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.

இலங்கையில் தமிழர்களுக்கான இனப்பிரச்சினை விடயத்தில் கண்ணியமாகவும், சமத்துவத்துடனும், நீதியாகவும் தனது அரசியலை முன்னெடுத்துச் சென்ற தலைவா் எனவும் தொிவித்துள்ளாா்.

பல தசாப்தங்களாக அவருடனான தனது பல சந்திப்புகள் மற்றும் உரையாடல்களைஇந்த நேரத்தில் நினைவுபடுத்துவதாகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினா் மற்றும் ஆதரவாளா்கள் அனைவருக்கும் தனது இரங்கல்களைத் தொிவிப்பதாக தனது எக்ஸ் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.

மிக நீண்ட காலம் தமிழ் மக்களின் உரிமைக் குரலாக ஒலித்தவா் சம்பந்தன் ஐயா – வடக்கு மாகாண ஆளுநா்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருவாளர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து கவலை அடைவதாக வடக்கு மாகாண ஆளுநா் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளாா்.

சுமார் ஐந்து தசாப்த அரசியல் வரலாற்றில் மிக நீண்ட காலம் தமிழ் மக்களின் உரிமைக் குரலாக இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்ததுடன், தமிழ் மக்களின் உரிமைக்காக சர்வதேச ரீதியிலும் செயற்பட்ட தலைவராக காலம் சென்ற இரா. சம்பந்தன் அவர்கள் காணப்படுகின்றார்.

இன ஐக்கியம், ஒருமைப்பாடு, நல்லிணக்கம் என்பவற்றின் அடிப்படையில் நாட்டு மக்களின் நன்மைக் கருதி அன்னார் செயற்பட்டார் என்றால் மிகையாகாது. இத்தகைய ஒரு பெரும் தலைவரின் இழப்பானது தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. அன்னாரின் மறைவானது இலங்கை வாழ் மக்களுக்கு பேரிழப்பாகும்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஓங்கி ஒலித்துகொண்டிருந்த குரல் இன்று மௌனித்துள்ளது. காலம் சென்ற திருவாளர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றேன். அன்னாரின் பிரிவால் மீளாத் துயரில் வாடும் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஏனைய அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என தனது அறிக்கையில் அவா் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.

6  தசாப்தங்களுக்கு மேலாக தன்னை தமிழ் தேசிய அரசியலுக்கு அர்ப்பணித்தவர் சம்பந்தன் ஐயா  -இரா.சாணக்கியன்

சம்பந்தன் ஐயா மரணமான செய்தி நேற்று இரவு 11.30மணியளவில் கிடைத்தது. இந்த செய்தியானது தமிழ் தேசிய பரப்பில் உள்ள அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

சம்பந்தன் ஐயா 6 தசாப்தங்களுக்கு மேலாக தன்னை தமிழ் தேசிய அரசியலில் முழுமையாக அர்ப்பணித்தவர்.  அவரது இழப்பு  ஈடுசெய்ய முடியாத ஒன்று. அன்னாரின் இறுதிக் கிரியைகளில் எமது உறவுகள் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.

சம்பந்தன் ஐயாவின் மறைவானது இலங்கை வாழ் மக்களுக்கு பேரிழப்பாகும்! -வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 14 ஆவது எதிர்க்கட்சித் தலைவரும், சிரேஷ்ட அரசியல்வாதியும், சட்டத்தரணியுமான திருவாளர் இராஜவரோதயம் சம்பந்தனின் மறைவுச் செய்தி அறிந்து கவலை அடைகின்றேன்.

சுமார் ஐந்து தசாப்த அரசியல் வரலாற்றில் மிக நீண்ட காலம் தமிழ் மக்களின் உரிமைக் குரலாக இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்ததுடன், தமிழ் மக்களின் உரிமைக்காக சர்வதேச ரீதியிலும் செயற்பட்ட தலைவராக காலம் சென்ற இரா. சம்பந்தன் காணப்படுகின்றார்.

இன ஐக்கியம், ஒருமைப்பாடு, நல்லிணக்கம் என்பவற்றின் அடிப்படையில் நாட்டு மக்களின் நன்மைக் கருதி அன்னார் செயற்பட்டார் என்றால் மிகையாகாது. இத்தகைய ஒரு பெரும் தலைவரின் இழப்பானது தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. அன்னாரின் மறைவானது இலங்கை வாழ் மக்களுக்கு பேரிழப்பாகும்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஓங்கி ஒலித்துகொண்டிருந்த குரல் இன்று மௌனித்துள்ளது. காலம் சென்ற திருவாளர் இராஜவரோதயம் சம்பந்தனின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றேன். அன்னாரின் பிரிவால் மீளாத் துயரில் வாடும் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஏனைய அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

சம்பந்தனின் இழப்பை இலங்கை அரசியலில் எவராலும் எளிதில் ஈடுசெய்ய முடியாது -தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 

இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு. இரா. சம்பந்தன் ஐயா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தமிழர்கள் மட்டுமல்லாது சிங்களவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் மரியாதையைப் பெற்ற அரும்பெரும் தலைவராகத் திகழ்ந்தவர் திரு. சம்பந்தன் அவர்கள்.

இறுதிமூச்சு வரையிலும் தமிழ்மக்களின் நலனுக்காகவே சிந்தித்தார், செயல்பட்டார். நாடாளுமன்றவாதியாக அரைநூற்றாண்டு காலம் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இலங்கையின் அரசியலில் பாரதூரமான தாக்கத்தைச் செலுத்தி வந்தன.

இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்காக மிக நீண்டகாலம் அறவழியில் சம்பந்தன் அவர்கள் போராடி வந்தார். இந்தியாவோடும் தமிழ்நாட்டுடனும் மிகச் சிறந்த நட்புறவை திரு. சம்பந்தன் அவர்கள் பேணி வந்தார்.

தலைவர் கலைஞர் அவர்களின் நண்பராகவும், இலங்கைத் தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும் பல முறை அவரைச் சந்தித்து மிகவும் முக்கியமான அரசியல் விவகாரங்கள் குறித்து திரு. சம்பந்தன் ஆலோசித்துள்ளார்.

2015-ஆம் ஆண்டில் சம்பந்தன் அவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, “எனது அருமை நண்பர் நாவலர் அமிர்தலிங்கம் அவர்களுக்குப் பிறகு, தமிழர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஆகியுள்ளது மகிழ்ச்சிக்குரியது.

இலங்கைத் தமிழர்கள் அனைவரும், தங்கள் வாழ்வில் விடிவுகாலம் ஏற்படாதா என்று நீண்ட நாட்களாக எதிர்நோக்கியிருக்கும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நமக்கெல்லாம் ஓர் நம்பிக்கையைத் தருகிறது” என்று முத்தமிழறிஞர் கலைஞர் வாழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2016-ஆம் ஆண்டு 13-ஆவது முறையாகத் தலைவர் கலைஞர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது திரு. சம்பந்தன் அவர்களும், “இதுவொரு சாதாரண சாதனையல்ல. எல்லோராலும் பாராட்டப்பட வேண்டிய ஒரு சாதனையாகும். இலங்கைத் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு ஒரு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வைப் பெறுவதற்கு உங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பு தொடர வேண்டும்” என வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ஈழத்தந்தை செல்வா, நாவலர் அமிர்தலிங்கம் ஆகியோருக்குப் பிறகு இலங்கை அரசியலில் மிகவும் போற்றத்தக்க தலைவராக விளங்கிய திரு. சம்பந்தன் அவர்களின் இடத்தை இலங்கை அரசியலில் எவராலும் எளிதில் ஈடுசெய்ய முடியாதது. அவரது மட்டுமின்றி, பேரிழப்பாகும்.

உலகெங்கிலும் மறைவு இலங்கைத் தமிழ் மக்கள் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கும் இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்த மாபெரும் அரசியல் ஆளுமையான திரு. சம்பந்தன் அவர்களை இழந்து தவிக்கும் அவரது அமைப்பினருக்கும் இலங்கைத் தமிழ் உறவுகளுக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related

Tags: AthavanAthavan NewsAthavan TVஇரா.சம்பந்தன்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பதில் சட்டமா அதிபராக ஜெனரல் பரீந்த ரணசிங்க பதவிப்பிரமாணம்!

Next Post

நாட்டை முன்னேற்றும் அரசியலுக்கே அனைவரும் முன்னுரிமை வழங்க வேண்டும்!

Related Posts

சீரமைப்பு பணியிலிருந்த மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
இலங்கை

சீரமைப்பு பணியிலிருந்த மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

2025-12-04
குரூப் கேப்டன் நிர்மல் சியம்பலாபிட்டியவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி!
இலங்கை

குரூப் கேப்டன் நிர்மல் சியம்பலாபிட்டியவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி!

2025-12-04
மறுமலர்ச்சிக்கான பாதை. – காங்கேசன்துறையில் வீதிகள் புனரமைப்பு!
யாழ்ப்பாணம்

மறுமலர்ச்சிக்கான பாதை. – காங்கேசன்துறையில் வீதிகள் புனரமைப்பு!

2025-12-04
தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்!
இந்தியா

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்!

2025-12-04
உதவிப் பொருட்களுடன் 47 பேர் கொண்ட மீட்புக் குழுவை இலங்கைக்கு அனுப்பிய பாகிஸ்தான்!
இலங்கை

உதவிப் பொருட்களுடன் 47 பேர் கொண்ட மீட்புக் குழுவை இலங்கைக்கு அனுப்பிய பாகிஸ்தான்!

2025-12-04
வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட வீதிகளின் புனரமைப்பு பணிகள்  ஆரம்பம்!
இலங்கை

வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட வீதிகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

2025-12-04
Next Post
நாட்டை முன்னேற்றும் அரசியலுக்கே அனைவரும் முன்னுரிமை வழங்க வேண்டும்!

நாட்டை முன்னேற்றும் அரசியலுக்கே அனைவரும் முன்னுரிமை வழங்க வேண்டும்!

பாடசாலைகளுக்கு முன்பாக இன்று கறுப்புக்கொடி போராட்டம்!

பாடசாலைகளுக்கு முன்பாக இன்று கறுப்புக்கொடி போராட்டம்!

போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்குமாறு பிரதமர் ரிஷி சுனக்கிடம் வலியுறுத்தல்

இந்து மத தா்மமே கைகொடுக்கும் - பிரதமர் ரிஷி சுனக்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
சீரமைப்பு பணியிலிருந்த மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

சீரமைப்பு பணியிலிருந்த மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

0
குரூப் கேப்டன் நிர்மல் சியம்பலாபிட்டியவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி!

குரூப் கேப்டன் நிர்மல் சியம்பலாபிட்டியவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த பெண்கள் இருவர் இந்தியாவில் கைது!

0
மறுமலர்ச்சிக்கான பாதை. – காங்கேசன்துறையில் வீதிகள் புனரமைப்பு!

மறுமலர்ச்சிக்கான பாதை. – காங்கேசன்துறையில் வீதிகள் புனரமைப்பு!

0
குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார் குழந்தை பாலியல் குற்றவாளி !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.