அகில இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கத்தினர் முன்னெடுத்துள்ள சுகயீன விடுமுறை போராட்டம் இன்றும் தொடர்கின்றது
சம்பளம் கொடுப்பனவு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அகில இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்
எவ்வாறாயினும் தங்களது கோரிக்கைகளுக்கு உரியதரப்பினரிடம் இருந்த சாதகமான தீர்வு கிடைக்கவில்லை என அகில இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதமர் செயலாளர் தெரிவித்துள்ளார்
இதேவேளை பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது கோரிக்கை தொடர்பாக சாதகமான நிலை எட்டப்படவில்லை என பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைத்தலைவர் தம்மிக்க எஸ் பிரியந்த தெரிவித்துள்ளார்