அட்லாண்டிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக புதிய புயல் ஒன்று உருவாகியுள்ளதாக என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
இந்த புயலுக்கு ‘பெரில்’ என பெயரிடப்பட்டதுடன் புயலின் நகர்வை தென் அமெரிக்கா, கரிபீயன் தீவு நாடுகளை சேர்ந்த வானிலை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் கரையோரங்களில் வசித்து வந்தவர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது
மேலும் வெனிசுலா, ஜமைக்கா, பார்படாஸ் உள்ளிட்ட நாடுகள் கடும் சேதத்தை சந்தித்துள்ளதுடன் இதனால் அங்கே சூறாவளி காற்றுடன் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.