சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியும் (Wang Yi), இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இன்று கஜகஸ்தானில் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 24 ஆவது உச்சி மாநாடு, நேற்று(ஜூலை 03) ஆரம்பமானது.
இந்த மாநாட்டில் பங்கேற்க, இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார்.
இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்யி-யை, அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்னை நீடித்து வரும் நிலையில், குறித்த இரு நாட்டு அமைச்சர்களும் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, இருவரும் எல்லை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து சிறிது நேரம் கலந்துரையாடியதுடன், புகைப்படமும் எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.