ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று மதியம் திடிர் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இந் நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி இன்று மதியம் 12.12 மணியளவில், ரிச்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளது.
50 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் கிழக்கு சிபா மாகாணத்திற்கு அப்பால், 35.2 டிகரி வடக்கு அட்சரேகை மற்றும் 140.5 டிகிரி கிழக்கே தீர்க்கரேகையில் உணரப்பட்டுள்ளது.
டோக்கியோவின் 23 தொகுதிகளிலும் இந்த நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நிலநடுத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
அத்துடன், சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.