இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் பேரனான பிரதீப் ஜயவர்தன, ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்திற்கு தனது ஆதரவை நல்கும் நோக்கில், அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, பிரதீப் ஜயவர்தன, ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக, சஜித் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலில் பிரவேசித்த பிரதீப் ஜயவர்தன, 2017 இல் நடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவானார்.
அதன்படி, பிரதீப் ஜயவர்தன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதி அமைப்பாளராகவும், மத்திய குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.