காலி நகரின் பல தாழ்வான பகுதிகள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அங்கு நேற்று இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக காலி – வக்வெல்ல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் காலி – பத்தேகம பிரதான வீதியில் காலி தலபிட்டிய மற்றும் பெலிகஹா, கஹதுவ வத்த ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
மேலும் இந்த மழை காரணமாக பல பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.