கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் வெற்றியினால் கடந்த நெருக்கடியின் போது தடைப்பட்டிருந்த எரிசக்தி துறை தொடர்பான திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்த முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்
நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் இன்று ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இதனைக் தெரிவித்தார்
இதன் மூலம் மின் நெருக்கடியை தீர்க்க இது பெரும் உதவியாக இருக்கும் என்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் சில தரப்பினர் வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.