இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி பாம்பன் மீனவர்கள் காலவரையறையற்ற போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்
இதன்காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கரையில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நெடுந்தீவு கடற்பிராந்தியத்தில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையல் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 25 பேர் அண்மையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து ஜூலை 15ஆம் திகதி வரை விளக்கமறியலி;ல வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் நம்புதாளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வருகைதந்த மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டதுடன் நான்கு நாட்டுப்படகுகள் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி பாம்பன் நாட்டு படகு மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்
இதேவேளை பாம்பன் மீனவர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் காரணமாக சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.