ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கட்சியின் சட்டபூர்வமான பொதுச் செயலாளராக தாம் இன்னமும் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, அலுவலகப் பணிகளை மீள ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அழைக்கிறோம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்
அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகரவை ஏற்றுக் கொள்வதாக அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.