கொழும்பில் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று இரவு 9 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அந்தவகையில் கொலன்னாவ நகரசபை எல்லை, கடுவெல நகரசபை எல்லை, முல்லேரியா மற்றும் கொட்டிகாவத்தை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்கு இந்த நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நீர் விநியோகிக்கப்படும் நீர் குழாயின் அவசர பராமரிப்பு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.