பங்களாதேஷில் பெய்து வரும் கனமழை காரணமாக 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 8 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பங்களாதேஷில் பருவநிலை மாற்றம் காரணமாக கடும் மழை பெய்து வருதுடன், இமயமலை மலைகளில் பனிப்பாறைகள் உருகி வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, இவ்வாரம் பதிவான கனமழை காரணமாக முக்கிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. ஆற்றங்கரைகளில் வசிக்கும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் நாட்களில் வடக்கு பகுதியில் வெள்ளம் இன்னும் அதிகமாகும் என பேரிடர் மேலாண்மை அமைச்சக செயலாளர் கம்ருல் ஹசன் தெரிவித்துள்ளார்.