நாட்டில் காணப்படும் 40,000 ஆசிரியர்களுக்காக பற்றாக்குறையை நிரப்ப 22,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் நாட்டில் காணப்பட்ட 40,000 ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் விதமாக 22,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர்.
குறிப்பாக கொரோனா காலத்தில் இணையவழி ஊடாக கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது, தொலைதூரக் கல்வி நடவடிக்கைகளை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் குறித்த உத்தியோகத்தர்கள் சிறந்த முறையில் முன்னெடுத்து வந்தனர்.
இவ்வாறு தமது பணிகளை சிறப்பாக முன்னெடுத்து வந்த இந்த 22,000 பேருக்கும் இதுவரை நிலையான அங்கீகாரமொன்று வழங்கப்படவில்லை.
எனவே இந்த 22,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் கல்வித்துறையில் உரிய இடம் வழங்கப்பட வேண்டும்” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.