ஆளுநர்கள் சிலர் வாகனங்களுக்காகவும், வெசாக் மற்றும் பொசன் போன்ற பல்வேறு விடயங்களுக்காகவும் பெருந்தொகையான பணத்தைச் செலவிட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்
குறிப்பாக சில ஆளுநர்கள் தமது தன்னிச்சையான அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆலோசகர்களை நியமித்துள்ளதாகவும், இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன் மேல்மாகாண ஆளுநர் அரசாங்கத்தின் எந்தவொரு சுற்றறிக்கையையும் சட்டத்தையும் கருத்திற்கொள்ளாமல் தீர்மானங்களை மேற்கொள்கின்றார் எனவும்,
பொறிமுறையின்றி பல்வேறு விடயங்களுக்காக இலட்சக்கணக்கான ரூபாய் செலவிடப்படுவதாகவும், இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் அவர் இந்த சபைக்கு பதில் சொல்ல வேண்டிவரும் எனவும் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.