”இலங்கை அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரின் இந்திய அணித் தலைவராக ஹர்த்திக் பாண்டியா செயற்படுவார்” எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் நிறைவடைந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருடன் இந்திய அணியை வழிநடத்திய ரோஹித் சர்மா, ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கை அணியுடன் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடருக்கு புதிய தலைவராக ஹர்த்திக் பாண்டியா தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.