யாழில் இடம்பெற்றுவுரம் வீதி விபத்துக்களினால் அவசரச் சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வைத்திய நிபுணர் கந்தையா மணிதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” யாழில் இடம்பெறும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.
இதன் காரணமாக யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வரும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக 16 தொடக்கம் 40 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு வீதி விபத்துக்களினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.