”நாட்டின் அடிப்படை பொருளாதார பிரச்னைகளில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும்” என காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே மல்லிகார்ஜூன கார்கே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ”நரேந்திர மோடியின் அரசானது வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், சமத்துவமின்மை போன்றவற்றால் கோடிக்கணக்கான மக்களை குழிக்குள் தள்ளியுள்ளது எனவும், 20 முதல் 24 வயதுடையவர்களின் வேலையின்மை விகிதம் 40 சதவீதமாக உயர்ந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொதுத்துறை நிறுவனங்களின் பெரும்பாலான அரசு பங்குகள் விற்கப்பட்டுள்ளன எனவும் இதனால் 7 பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து மட்டும் 3.84 லட்சம் பேர் அரசு வேலைகளை இழந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.