அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வாக்குமூலத்தை பொலிஸ் மாஅதிபரின் உத்தரவை மீறி ஊடகங்களுக்கு வழங்கியமை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக குறித்த அறிக்கை கோரப்பட்டுள்ளதுடன், இரண்டு வாரங்களுக்குள் குறித்த அறிக்கையை கையளிக்க வேண்டும் எனவும் ஆணைக்குழு கூறியுள்ளது.
இது குறித்து பொலிஸ் விசேட விசாரணை பிரிவினர் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் போது பின்பற்ற வேண்டியவை குறித்து அறிவுறுத்தல்களை வழங்கி பொலிஸ்மா அதபரினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கைது செய்யப்படும் சந்தேகநபர்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் இந்த நிலைமையை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.