”அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர் கிளப் வசந்தவின் சடலத்தை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டாமென” பொரளையில் உள்ள பிரபல மலர்சாலைக்கு தொலைபேசி மூலம் அண்மையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த மிரட்டல் அழைப்பானது பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்றுவரும் மாணவியின் சிம் அட்டையில் இருந்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சிம் அட்டையானது அச்சுறுத்தல் அழைப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த மாணவி மாத்தறை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் குறித்த அழைப்பினை மேற்கொண்டவர் யார் என்பது இதுவரை தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.