பெருந்தோட்ட கம்பனிகள் தமக்கு ஜனாதிபதியால் அதிகரிக்கப்பட்ட நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவ பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விசேட வர்த்தமானி மூலம் தோட்டத் தொழிலாளியின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக உயர்த்தி தொழிலாளர் அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு கோரி தோட்டக் கம்பனிகள் உச்ச நீதிமன்றில் இடைக்காலத் தடையுத்தரவு மனு தாக்கல் செய்திருந்தது.
பொகவந்தலாவ பிரதேசத்தில் நிலவும் சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது தொழிலாளர்கள் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்
மேலும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நகரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.