பாரம்பரிய அரசியலில் இருந்து விலகி நாட்டைப் பற்றி சிந்திக்கும் அரசியல் கலாசாரம் நாட்டின் எதிர்காலத்திற்கு அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சட்டத்தரணிகள் குழுவுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்பை குறைத்து மதிப்பிட முடியாது என தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வேலைத்திட்டத்திற்கு அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு சகலராலும் ஆதரவளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் அரசியல் செய்வதற்கு எவருக்கும் உரிமை உண்டு, ஆனால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் பொருளாதார கட்டமைப்பை உடைக்க எவரும் உழைக்கக்கூடாது என்றும் கடந்த சில வாரங்களிலும் அதற்கு முன்னரும் இடம்பெற்ற வேலைநிறுத்தங்கள் அதன் பின்னர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டவை எனவும் ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டுள்ளார்.