நாட்டில் இன்று பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்பில் செயற்படும் நெடுநாள் மீன்பிடி படகின் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்திற்காக இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தென்மேற்கு பருவக்காற்று வானிலை காரணமாக அந்த கடல் பகுதிகளில் 70-80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுவதுடன் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படக்கூடும்.
மேலும் இந்த கடற்பரப்புகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவோர் உடனடியாக கரையின் பாதுகாப்பான பகுதிகளுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.