தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, தலா ஒரு மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்வதற்கு நீதவான் அனுமதியளித்தார்.
அத்துடன் இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, பிறப்பிக்கப்பட்டுள்ள திறந்த பிடியாணையின் பிரகாரம், அசங்க அபேகுணசேகர கைது செய்யப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். கட்டாரில் இருந்து நாடு திரும்பிய நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.