கட்டுநாயக்க விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள VFS விசா வழங்கும் நடைமுறையை இடைநிறுத்துமாறு கோரி, பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக மூன்று மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இந்த மூன்று மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தேசிய பாதுகாப்பு தரவுகளுக்கு அச்சுறுத்தல் உள்ளதால் VFS விசா நடைமுறையை இடைநிறுத்துமாறு மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அண்மையில், விஎஃப்எஸ் குளோபலில் (VFS Global) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) விசா வழங்கும் நடைமுறைகள் மற்றும் கட்டணங்கள் குறித்து விமர்சனங்கள் எழுந்துந்திருந்தன.
இதனால் ஏற்பட்ட குழப்பங்களைத் தொடர்ந்து (VFS Global) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) செயற்படுவதும் தற்காலிகமாக நிறுத்தபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.