நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனினால் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து எதிர் வரும் 27 ஆம் திகதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க., அறிவித்துள்ளது.
நேற்று முன்தினம் ( 23) தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.
இந்நிலையில் இது குறித்து தி.மு.க., வெளியிட்ட அறிக்கையில்” நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் தமிழகம் போன்ற மாநிலங்கள் மீது வன்மம் காட்டும் விதத்தில் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து, வரும் 27 ம் திகதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்பாட்டம் நடக்கும்.
எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும்” இவ்வாறு குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.