உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் பொலிஸ் மா அதிபருக்கு மட்டும் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் மா அதிபா் பதவி வெற்றிடமில்லை என ஜனாதிபதிக்கு சட்ட ஆலோசனை கிடைத்துள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 21 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி, பொலிஸ் மா அதிபா் பதவி வெற்றிடமாக இல்லாத நிலையில், ஜனாதிபதியால் பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியாது என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக, சம்பந்தப்பட்ட சட்டப் பிரச்சினை தீர்க்கப்படும் வரை, பொலிஸ் மா அதிபர் பதவி காலியாகவே இருக்கும் என, அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, பொலிஸ் மா அதிபர் தனது கடமைகளை மேற்கொள்வதில் மாத்திரமே தடையாக உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவா் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.