நாட்டில் சட்டம் நடைமுறைப்படுத்துப்படுவதில் ஜனாதிபதி உட்பட அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”நாட்டில் ஜனநாயக உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
அவரவரின் அரசியல் தேவைகளுக்கேற்ப அரசியலமைப்பினையோ அல்லது நாட்டின் சட்டங்களையோ மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது.
நீதிமன்றத்தினால் ஒரு தீர்ப்பு வழங்கப்படும் போது அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது.
நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரமே தீர்ப்பு வழங்கப்படுகின்றது. எனவே நீதிமன்ற தீர்ப்பினை கேள்விக்குட்படுத்த முடியாது. சட்டம் நாட்டின் பிரதான தூண்களில் ஒன்றாகும். பொலிஸ் மா அதிபருக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டதனை பலரும் விமர்சித்து வருகின்றன.
பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பான தீர்ப்பு தொடர்பாக இரண்டு நாட்களில் ஆழமாக பரிசீலிக்க வேண்டும். என அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.