21 ஆம் திருத்தத்தின் பிரகாரம் அரசியலமைப்பு பேரவைக்கு எதிராக ஒருவரினால் அடிப்படை உரிமை மனுதாக்கல் செய்யமுடியும்” என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதியாகும் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
21 ஆம் திருத்தத்தின் பிரகாரம் அரசியலமைப்பு பேரவைக்கு எதிராக ஒருவரினால் அடிப்படை உரிமை மனுதாக்கல் செய்யமுடியும்.
19 ஆவது திருத்தத்திலும் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறாயின் நிறைவேற்று அதிகாரம் ஊடாக மேற்கொள்ளப்படும் தீர்மானத்திற்கு எதிராக அடிப்படை உரிமை மனுதாக்கல் செய்யமுடியும்.
பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதியே நியமித்தார். இந்த நியமனமானது அரசியலமைப்பின் அதிகாரத்தினை மீறும் செயலாகும் என உயர்நீதிமன்றம் நேற்று அறிவித்திருந்தது. அரசாங்கம் இந்த தீர்ப்பினை நடைமுறைப்படுத்த வேண்டும்” இவ்வாறு லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.