2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கமைய , 2024 ஜூலை மாதத்திற்கான கொழும்பு நகர சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் 2.4சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ஜூன் 2024 இல் 1.7சதவீதமாக பதிவாகியிருந்தது.
உணவு வகையின் ஆண்டு பணவீக்கம் ஜூலை 2024 இல் 1.5மூ ஆக உயர்ந்ததுள்ளதுடன், ஜூன் 2024 இல் அது 1.4சதவீதமாக காணப்பட்டது.
மேலும், 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உணவு அல்லாத பிரிவின் வருடாந்த பணவீக்கம் 2.8% ஆக அதிகரித்துள்ளதுடன், 2024 ஜூன் மாதத்தில் அந்த பணவீக்கம் 1.8சதவீதமாக காணப்பட்டதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.