எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுதற்கு இதுவரையில் 10 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்கு தெரிவித்துள்ளது.
அந்தவகையில் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கு ஓசல ஹேரத்தும், இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் ஏ.எஸ்.பி.லியககேவும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சஜித் பிரேமதாசவும், தேசிய அபிவிருத்தி முன்னணி சார்பில் எஸ்.கே.பண்டாரநாயக்கவும், தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் விஜயதாஸ ராஜபக்ஷவும், ஐக்கிய சோஷலிச கட்சி சார்பில் சிறிதுங்க ஜயசூரியவும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற ரீதியில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இதேவேளை அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி என்ற பிரிவில் றுஹுணு மக்கள் முன்னணி சார்பில் அஜந்த த சொய்ஸா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
மேலும் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்தி ரத்ன, மற்றும் கே.கே.பியதாஸ ஆகியோரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.