நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான திருத்தங்கள் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நிகழ்நிலை காப்பு சட்டம் கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், அதன் சில சரத்துகளை திருத்தும் வகையிலேயே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.