ஹமாஸ் அமைப்பின் தலைவர், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ள நிலையில், இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியேவும் கடந்த 31 ஆம் திகதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதனையடுத்து லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஜ்புல்லா அமைப்பு 20 இற்கும் மேற்பட்ட ஏவுகனைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இவற்றில் 5 மட்டுமே இஸ்ரேல் பிராந்தியத்துக்குள் நுழைந்ததாகவும் இதனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேல் தகவல்கள் தெரிவித்துள்ளன.