ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களில் சிலர் மீண்டும் கட்சிக்கு வருவார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின் பிறகு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனிவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு எமது கட்சி முடிவெடுத்தள்ளதாகவும், இந்த முடிவு மாறாது எனவும், அத்துடன், வேட்பாளர் விரைவில் பெயரிடப்படுவார் எனவும் அவர் கூறியுளள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியுள்ள உறுப்பினர்கள் தற்போது கிராமங்களுக்கு சென்ற பிறகு, அங்குள்ள மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்போம் என்றே கூறுவதானால் கட்சியிலிருந்த விலகிச் சென்றவர்களில் சிலர் மீண்டும் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கட்சி செயலாளரை மாற்றுவதற்கென நடைமுறை உள்ளதுடன், மாவட்ட கூட்டங்களில் அதனை செய்ய முடியாது எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன மேலும் தெரிவித்துள்ளார்.