நாட்டில் நிலையான பொருளாதார ஸ்திரத்தன்மை இருந்தால் மாத்திரமே மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
திருகோணமலை மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுடன் திருகோணமலை இந்து கலாச்சார நிலையத்தில் நேற்று நடைபெற்ற
சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
இந்த நாட்டின் அப்போதைய நிலையை நான் நினைவுகூரத் தேவையில்லை. சிலரது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன.
ஊருக்கு வரக்கூடாது என அச்சுறுத்தினர்.
ஆனால் 2022 ஜூலை மாதத்தில் நாட்டின் மீட்சிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்தோம்.
இந்த அமைச்சர்கள், எம்.பிகள் அனைவரும் எங்களுடன் இணைந்து, 2023ஆம் ஆண்டுக்குள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை
வழமை நிலைக்கு கொண்டு வர முடிந்தது.
இப்போது எம்மால் வங்குரோத்து நிலையில் இருந்து மீள முடிந்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் எங்களுக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டை காண முடிந்தது.
2042 வரை எங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளை மீறினால், அந்த சலுகைகளை இழக்க நேரிடும்.
பிரதமர் பதவியை ஏற்குமாறு அறிவித்த போது தப்பியோடியது யார்? பிரதமர் பதவிக்கு கையேந்தியது போன்று வேறு எந்த நாடாவது உலகில் இருக்க முடியுமா?
எனது நண்பர் அனுரகுமார திசாநாயக்கவும் அப்போது ஓடி ஒழிந்தார்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தொிவித்தாா்.