கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர் உட்பட 10 சந்தேகநபர்கள் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர்
இன்னிலையில் கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பச்சை குத்துதல் நிலையத்தின் உரிமையாளரான பத்து சந்தேக நபர்களும் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்
இதேவேளை, கிளப் வசந்த உள்ளிட்ட இருவரைக் கொன்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
கடந்த ஜூலை 8ஆம் திகதி அதுருகிரிவில் உள்ள பச்சை குத்தும் மையத்தில் டி56 துப்பாக்கியால் மேற்கொள்ளப்பட்ட பிரேயோகத்தில் கிளப் வசந்தா மற்றும் மற்றொரு நபர் உயிரிழந்திருந்தனர் மேலும் 4 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது