பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.